எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி!

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு கிடையாது. பதிலாக 3 அடுக்கு ஏ.சி. பெட்டி!

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.அடுத்த 5 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும். அதே சமயம் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர ரெயில் பயணிகளுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஏ.சி. பெட்டிகளாக மாற்ற முடிவெடுத்துய் இதன் முதல் கட்டமாக எர்ணாகுளம்–நிஜாமுதீன் (டெல்லி) மங்களா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்: 12617) எஸ்–2 என்ற படுக்கை வசதி கொண்ட 2–ம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமை முதல் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பி–4 என்ற 3 அடுக்கு ஏ.சி. பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் அந்த ரெயிலில் 2–ம் வகுப்பு பெட்டிகள் 11 ஆக இருந்தது, 10 ஆக குறைந்துள்ளது. அதாவது 2–ம் வகுப்பு படுக்கைக்கான 72 டிக்கெட்டுகள், ஏ.சி. கட்டணத்துக்கு மாறிவிட்டது. இந்த ரெயிலில் எர்ணாகுளத்தில் இருந்து டெல்லிக்கு 2–ம் வகுப்பு டிக்கெட் கட்டணம் ரூ.925. ஆனால் மூன்றடுக்கு ஏ.சி. கட்டணம் ரூ.2,370 ஆகும்.
3 tier train
சென்னை எழும்பூர்–மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16859) ரெயிலில் எஸ்–7 என்ற 2–ம் வகுப்பு பெட்டி ஞாயிற்றுக்கிழமையும், மங்களூர் சென்டிரல்–சென்னை எழும்பூர் (வண்டி எண்:16860) எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்–9 என்ற 2–ம் வகுப்பு பெட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதலும் நீக்கப்படுகிறது. இதற்கு பதிலாக இரு மார்க்கங்களிலும் டி–4 என்ற ஏ.சி.சேர்கார் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்குள் அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரெயில்களிலும் 2–ம் வகுப்பு பெட்டிகளை முழுவதுமாக மாற்றிவிட்டு, ஏ.சி. பெட்டிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி 2–ம் வகுப்பு பெட்டிகள் தயாரிப்பதை குறைக்கவும், அதற்கு பதிலாக ஏ.சி. பெட்டிகளை அதிகமாக தயாரிக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் வசதியானவர்களுக்கு சொகுசான பயணமாக இருக்கும். அதே சமயம் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர ரெயில் பயணிகளுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும். எனவே இந்த திட்டத்திற்கு ரெயில் பயணிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது!.

error: Content is protected !!