ஏர்டெல் இன்று இந்தியா முழுவதும் வர்த்தகரீதியாக ஹை ஸ்பீடு 4G சேவைகளை தொடங்கியது!

ஏர்டெல் இன்று இந்தியா முழுவதும் வர்த்தகரீதியாக ஹை ஸ்பீடு 4G சேவைகளை தொடங்கியது!

இந்தியாவில் 3G மற்றும் 4G வசதிகள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்து 3-ஆண்டுகளுக்கு மேலாகியும் வெறும் 13
சதவீத மொபைல் சந்தாதாரர்களே அவற்றை பயன்படுத்துவதாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான Internet.org வெப்சைட் தெரிவி்த்துள்ளது. இத்தனைக்கும் உலக அளவில் 3G, 4G மொபைல் டேட்டாக்களின் கட்டணங்கள்
குறைவாக இருப்பது இந்தியாவில்தான் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில் இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருவதில் முன்னிலையில் இருந்து வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்று வர்த்தகரீதியாக ஹை ஸ்பீடு 4G சேவைகளை இந்தியா முழுவதும் துவங்கியுள்ளது.
4g airtel
முன்னதாக ஹை ஸ்பீடு மொபைல் டேட்டா பயன்பாடு குறித்து ஆய்வு செய்ததில் இந்தியாவில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 149 எம்.பி. அளவே 3G டேட்டா பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது. கானா, தென் ஆப்பிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 3G சேவை குறைவாக பயன்படுத்தப்படுவதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகிறது. அவை:

சில இடங்களில் மட்டுமே சேவை: பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் மெட்ரோ மற்றும் முதல் நிலை நகரங்களில் மட்டுமே 3G, 4G சேவையை வழங்கி வருகிறது. மற்ற இடங்களில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை அதிகமாக அமைப்பதில்லை.

டேட்டா கட்டணம் அதிகம்: 2G-யுடன் ஒப்பிடுகையில், 3G மற்றும் 4G டேட்டா சேவை கட்டணங்கள் இன்னும்
அதிகமாகவே உள்ளது. இந்தியர்களிடம் பொதுவாகவே price conscious அதிகம் உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

வேகம் முழுமையாக கிடைப்பதில்லை: எல்லா இடங்களிலும் 3G, 4G-யின் வேகம் முழுமையாக கிடைப்பதில்லை.
இதற்கு 2G-யே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிடுவதும் ஒரு காரணம்.

பேட்டரி பவர் குறைதல்: பொதுவாக, ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லட்டுகளில் 3G, 4G- ஆக்டிவேஷனில் இருக்கும் போது அதிகமாக பேட்டரி சக்தி வீணாகிறது. தினமும் 2 முறை இதனால் சார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது.

சேவைக்கேற்ற கருவிகள் இல்லாமை: 3G, 4G வசதிகள் சப்போர்ட் செய்யும் கருவிகள் விலை அதிகமாக இருப்பதும்,
புதிய தொழில் நுட்பங்கள் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

இதனிடையேதான் ஏற்கனவே, குறிப்பிட்ட நகரங்களை தேர்வு செய்து சோதனை ஓட்டமாக இந்த சேவையை வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் இன்று முதல் 296 நகரங்களில் 4G சேவையை வழங்குகிறது.

மொபைல் போன்கள், டாங்கிள்கள், 4G ஹாட்ஸ்பாட்டுகள், வை-ஃபை டாங்கிள்கள் என அனைத்து ஸ்மார்ட் கருவிகளிலும் இந்த சேவைகளை வழங்க துவங்கியுள்ளது. ஏற்கனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் 4G இண்டர்நெட் சேவையை ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லூலார் நிறுவனங்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தனது 4G சேவையை துரிதப்படுத்தியிருக்கிறது ஏர்டெல். என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!