மத்திய அரசு அதிகாரிகளை விட ஜனாதிபதிக்கு சம்பளம் கம்மி!

மத்திய அரசு அதிகாரிகளை விட ஜனாதிபதிக்கு சம்பளம் கம்மி!

நம் நாட்டின் மிகப்பெரிய பதவிகளை வகிப்பவர்கள் ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் ஆவர். ஆனால் இவர்கள் மத்திய அரசின் உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட மிகவும் குறைவாக மாதச் சம்பளம் பெறுவது தெரியவந்துள்ளது.

ஆம்.. இந்திய முதல் குடிமகன் என்ற அந்தஸ்தில் உள்ள ஜனாதைபதி தற்போது மாத சம்பளமாக ரூ.1.50 லட்சமும், துணை ஜனாதிபதி 1.25 லட்சம், கவர்னர் ரூ.1.10 லட்சம் பெறுகின்றனர். அதே சமயம் 2 வருடங்களுக்கு முன் 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினட் செயலரின் சம்பளம் ரூ.2.5 லட்சம். பல துறைகளின் செயலர்கள் ரூ.2.25 லட்சம் சம்பளமாக வாங்குகின்றனர். முப்படை தளபதிகளின் சம்பளமானது, அதன் தலைவரான ஜனாதிபதி சம்பளத்தை விட அதிகம். இதனையடுத்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி சம்பளத்தை உயர்த்தவது குறித்து உள்துறை அமைச்சகம் அறிக்கை தயாரித்து, அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்காக அமைச்சரவை செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த ஒப்புதலும் கிடைக்கவில்லை.

இதுபற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களுக்கு சம்பளத்தை உயர்த்தும்படி கோரிய பரிந்துரை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்காக தாக்கல் செய்யப்படவேண்டும். அதன்பிறகே அவர்களுக்கு புதிய சம்பள விகிதம் நடைமுறைக்கு வரும்” என்றார். பரிந்துரைக்கப்பட்ட சம்பள விகிதத்தில் ஜனாதிபதிக்கு மாதச் சம்பளம் ரூ.5 லட்சமும், துணை ஜனாதிபதிக்கு ரூ.3½ லட்சம், கவர்னர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கடைசியாக 2008-ம் ஆண்டு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு ஜனாதிபதி ரூ.50 ஆயிரம், துணை ஜனாதிபதி ரூ.40 ஆயிரம், மாநில கவர்னர்கள் ரூ.36 ஆயிரம் மாதச் சம்பளமாக பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!