ரிசர்வ் வங்கி ஆளுநராக ரகுராம் ராஜன் நீடிப்பார்!

ரிசர்வ் வங்கி ஆளுநராக  ரகுராம் ராஜன் நீடிப்பார்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தேசிய ஜனநாயகக் கூட்டணி புதிதாகப் பொறுப்பேற்று நிலையில், அப்பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே பதவியில் அவருடன் பணி செய்ய மத்திய அரசால் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரகுராம் ராஜன் கடந்த செப்டம்பர் மாதம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். தமிழரான இவர் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பதவி வகித்தவர். 2008-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதை முன்கூட்டியே சரியாக கணித்து அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
rbi
தேர்தல் முடிவுகள் வெளியான சூழலில், புதிதாகப் பொறுப்பேற்கும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆளுநரை மாற்றம் செய்யலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் ரகுராம் ராஜன் சந்தித்துப் பேசினார்.நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பண வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விலை வாசி உயர்வு குறித்த விஷயங்களை ஆலோசனை செய்தார். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படும் நிதி கொள்கை மறுசீராய்வு அறிக்கையை அடுத்த மாதம் 3ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.இதனிடையே, தற்போதுள்ள ரிசர்வ் வங்கி குழுவுடன் புதிய அரசு இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!