அமர்நாத் புனித யாத்திரை இன்று காலை தொடங்கிடுச்சு!

அமர்நாத் புனித யாத்திரை இன்று காலை தொடங்கிடுச்சு!

ம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெருமழை கொட்டியது. மேகவெடிப்பு ஏற்பட்டதில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து, காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். படுகாயமடைந்த நபர்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களது உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் காயமடைந்து மீட்கப்பட்ட நபர்களில் ஒரு சிலர் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து பக்தர்கள் அடங்கிய குழு ஒன்று ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து புறப்பட்டு தரிசனத்திற்கு சென்றுள்ளனர்.

error: Content is protected !!