தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை! – தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை! – தேர்தல் கமிஷன் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல், வெள்ளப்பெருக்கு காரணமாக தமிழகத்தில் குடியாத்தம், திருவொற்றியூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் பீகார் மாநிலத்தில் வால்மீகி நகர் எம்பி தொகுதியிலும். அசாம், உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒரு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும்.அவ்வாறு 6 மாதங்களுக்குள் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் அது குறித்து மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துடன் மத்திய தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்த வேண்டும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட தொகுதியில் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த இயலவில்லை என்பதற்கான சான்றிதழை மத்திய சட்ட அமைச்சகத்துக்கு இந்தியத் தேர்தல் கமிஷன் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த நடைமுறையை பின்பற்றி தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும். பீகார் மாநிலத்தில் உள்ள வால்மீகி நகர் எம்பி தொகுதியிலும். அசாம் மாநிலம் – சிப் சாகர் . மத்தியபிரதேசம் – அகார். உத்தரப் பிரதேசம் – புலந்தர் மற்றும் துண்ட்லா. கேரள மாநிலம் – சவாரா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூலை 22 ஆம் தேதி உரிய சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுதல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இடைத்தேர்தல்களை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள 8 இடங்களிலும் மீண்டும் தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என்று ஆலோசித்த அதற்கு வெள்ளிக்கிழமை அன்று தேர்தல் கமிஷனில் கூட்டம் நடைபெறும் என்றும் தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஒட்டு மொத்தமாக 57 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டும். 8 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது மற்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட வில்லை என்றும் தேர்தல் கமிஷன் அதிகாரி குறிப்பிட்டார்.

error: Content is protected !!