இந்திய ஒர்க்கருக்கு சம்பளம் ரொம்ப கம்மி!

இந்திய ஒர்க்கருக்கு சம்பளம் ரொம்ப கம்மி!

தொழில் புரிவதற்கு ஏற்ற சூழல் இருக்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 189 நாடுகளின் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. சீனா 84-ம் இடத்தில் இருக்கிறது. இதனிடையே ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளில் இந்தியாவில்தான் பணியாளர்களின் ஆண்டுச் சராசரி சம்பளம் குறைவாக உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

rs june 8

இதுதொடர்பாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,500 நிறுவனங்களின் பணியாளர்களிடம், “வில்லிஸ் டவர்ஸ் வாட்சன்’ எனும் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிவோரின் ஆண்டு சராசரி ஊதியம் ரூ.66 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.4.4 லட்சம்) உள்ளது. இது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை ஒப்பிடும்போது குறைவு என்பதுடன், சீனாவில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதியாகும். தொழில் நிறுவனங்களில் பல்வேறு நிலைகளில் பணிபுரிவோருக்கு இந்தியாவில் அளிக்கப்படும் ஊதியத்தைவிட சீனாவில் 64 முதல் 100 சதவீதம் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!