சென்னை சோழிங்க நல்லூர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு?

சென்னை சோழிங்க நல்லூர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடு?

‘ஆளுக்கொரு வீடு கட்டுவோம்” என்று பாடிய புரட்சித்தலைவரின் வரிகளுக்கு உயிர் கொடுத்து, சொந்த வீடு வேண்டும் என்று கனவு காணும் தமிழக மக்களின் ஆசைக் கனவுகளை ஈடேற்றி, அனைவருக்கும் வீடு” என்னும் குறிக்கோளை நிறைவேற்றிட, ஜெயலலிதா, தொலைநோக்குத் திட்டம் 2023 ஆவணத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் வீட்டுவசதி அளிப்பதையும், தமிழ்நாட்டை குடிசைப் பகுதிகள் அற்ற மாநிலமாக மாற்றுவதையும், தனது இலட்சிய நோக்காக பிரகடனப்படுத்தினார். ஜெயலலிதாவின் இந்த உயரிய எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்திட, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் வாயிலாக பல்வேறு சீர்திருத்தங்களையும், கட்டுமானத் தொழில் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகின்றது.

மேலும் அகில இந்திய அளவில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், மிக அதிக அளவிலான வீட்டுவசதி அலகுகள் ஒப்புதல் பெறப்பட்டு, மேலும், அதிக அளவிலான அலகுகளுக்கு பணி தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. தொலை நோக்குத் திட்டம் 2023 ன் ஒரு பகுதியாக, அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில், ரூ. 6,414 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில், 1 லட்சத்து 87 ஆயிரத்து 679 எண்ணிக்கையிலான, வீட்டுவசதி அலகுகளுக்கு, மைய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக கடந்த நிதியாண்டில், மாநில வரவு–செலவு மதிப்பீட்டில், ரூ. 689 கோடியும், இந்த நிதியாண்டில், ரூ.826 கோடியும், ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அயராத உழைப்பின் காரணமாக, இந்திய திருநாட்டிலேயே உயரிய பல பெருமை களை தமிழ்நாடு பெற்றிருக்கிறது.இந்தியாவிலேயே, மக்கள் வாழத் தகுதி கொண்ட சிறந்த நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது நகரங்களில், அனைத்து வீட்டு வசதிகளுடனும் வாழத் தகுதிமிக்க நகரமாக முதலிடத்தில் இருப்பது நமது சென்னை மாநகரம். அதே போல, அனைத்து பிற வசதிகளுடன் வாழத் தகுதியான இந்தியாவின் சிறந்த பத்து மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது.

இந்நிலையில் சென்னை சோழிங்க நல்லூரில் ரூபாய் 220 கோடியில் 2000 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு தமிழ்நாடு வீடு வசதி வாரியம் சார்பில் டெண்டர் எண் cc/08/2017 – 18 தேதி 9.05.2017 அன்று கோரப்பட்டது. இதையடுத்து நடந்த டெண்டரில் வீட்டு வசதி வாரியத்தில் உள்ள சில மேலதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு வேண்டிய அரசியலில் செல்வாக்குள்ள ஈரோட்டைச் சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரரை மட்டுமே பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் வேறு யாரையும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என முயற்சித்தனர். ஆனால் எக்ஸ் எம். டி. மற்றும் தலைமை பொறியாளர் (C.E) ஆகியோர் ஒத்துழைக்க மறித்துள்ளனர்.

இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் TNHB மேலதிகாரிகளின் எச்சரிப்பையும் பொருட்படுத்தாமல் தங்களது ஒப்பந்த கோரிக்கையை சமர்பிப்பத்தது. இதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்திற்கான சான்றுகளை சரி பார்க்க TNHB எக்ஸ் எம் டி நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதன் உஅயர் அதிகாரி அரசியல் செல்வாக்குடன் 2.08. 2017 அன்று (நாளை) நடக்க உள்ள வாரிய கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டு வர காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தை நீக்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த பின்னணியில்தான் எக்ஸ் எம்.டி கிரண் குரனா மாற்றம் செய்யப்பட்டார் என்பதும் இது நம்மூர் சேனல்கள் , மீடியாக்கள் உள்ளிட்ட பலருக்கு தெரிந்தாலும் கண்டு கொள்ளாமலிருக்க கவனிக்கப்படுள்ளார்கள் என்றும் தகவல் கசிகிறது.

error: Content is protected !!