ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கு பயிற்சி : அரசு அனுமதி!

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கு பயிற்சி : அரசு அனுமதி!

ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் சாத்தியம் உள்ள முக்கிய வீரர்களுக் கான பயிற்சி முகாமுக்கு இந்திய விளையாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய துப்பாக்கி சுடுதல் அணியினருக்காக கார்ணி சிங் துப்பாக்கி சுடும் தளத்தையும் இந்திய விளையாட்டு ஆணையம் திறந்துள்ளது.

மேலும், அரசின் செலவில் 64 கூடுதல் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு ஆயுதங்களும், இலக்கு களும் வழங்கப்படும். தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்தில் கொண்டு, பயிற்சி முகாமை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அனைத்து பங்குதாரர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வீரர்களும், பணியாளர்களும் ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருப்பதால், 10 நாட்களுக்கான குறுகிய கால பயிற்சி முகாம் சரியானதாக இருக்காது.

மேலும், வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் செயல்முறை மற்றும் தங்குமிடம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!