இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்!

இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகிய ராஜபக்சே எதிர் கட்சி தலைவரானார்!

இலங்கை பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்ய ராஜபக்சேவுக்கு இலங்கை நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை கொடுத்துள்ளதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரதமராக நேற்று முன்தினம் ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றார். இந்தநிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சவை சபாநாயகர் கரு.ஜெய சூரிய இன்று நியமித்துள்ளார்.தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தொடரின் போது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதை அறிவித்தார். ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்த

முன்னதாக இப்பதவியில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த இரா.சம்பந்தன் நீக்கப் பட்டார். ஆனால் ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சி பதவி வழங்குவது எப்படி என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி யான சுமந்திரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை வரும் வெள்ளிக்கிழமை தீர்க்கப்படும் என சபாநாயகர் கரு.ஜெய சூரிய தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!