கிரிக்கெட் : ரன் மெஷின் ஆம்லா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!

கிரிக்கெட் :  ரன் மெஷின் ஆம்லா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு!

தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி வந்த ஹசிம் ஆம்லா உலக அளவில் மிக முக்கியமான கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வந்தார். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்த இவர், தென் ஆப்பிரிக்க அணிக்காக 349 சர்வதேச ஆட்டங்களில் (டெஸ்ட், ஒருநாள், டி20) விளையாடியுள்ளார். இதில் 55 சதம், 88 அரைசதம் உட்பட மொத்தம் 18,000 சர்வதேச ரன்கள் குவித்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸில் 2000, 3000, 4000, 5000, 6000 மற்றும் 7000 ஆகிய ரன்கள் எட்டிய வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார். குறைந்த இன்னிங்ஸில் 5000, 6000 மற்றும் 7000 ரன்கள் என்று இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி படைத்த சாதனையை பின்னுக்குத் தள்ளி இவர் முதலிடம் பிடித்துள்ளார். ஆனால், குறைந்த இன்னிங்ஸில் 8000 ரன்கள் என்ற சாதனையை இவரால் முறியடிக்கவில்லை. இவருடைய ரன் குவிப்புத் திறனால் சர்வதேச கிரிக்கெட்டில் இவரும் ரன் மெஷின் என்றே அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் 36 வயதான ஆம்லா இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுப்போவதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்:

  • ஆட்டங்கள் – 124
  • ரன்கள் – 9282
  • பேட்டிங் சராசரி – 46.64

ஒருநாள் கிரிக்கெட்:

  • ஆட்டங்கள் – 181
  • ரன்கள் – 8113
  • பேட்டிங் சராசரி – 49.46

டி20 கிரிக்கெட்:

  • ஆட்டங்கள் – 44
  • ரன்கள் – 1277
  • பேட்டிங் சராசரி – 33.60

Related Posts

error: Content is protected !!