தற்கொலை முயற்சி இனி தப்பே இல்லை!: மத்திய அரசு அறிவிப்பு

தற்கொலை முயற்சி இனி தப்பே இல்லை!: மத்திய அரசு அறிவிப்பு

உலக சுகாதார மையத்தின் கடந்த ஆண்டு புள்ளியல் கணக்கெடுப்பின்படி கடந்த 2013ம் ஆண்டு இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதாவது நாள் ஒன்றுக்கு 369 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் 12.3 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, ஆந்திரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன. மொத்த தற்கொலையில் 53.5 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் நிகழ்கிறது. குடும்ப பிரச்னை, காதல் தோல்வி,தீராத நோய் ஆகிய தற்கொலைக்கு முக்கிய காரணங்களாக உள்ளன என்றல்லாம் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்கொலை முயற்சி இனி தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக அறிவித்துள்ளது.
suicide
தற்போது தற்கொலை முயற்சி குற்றத்துக்கு தற்போது ஓராண்டு காலம் வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உண்டு என்றிருக்கும் நிலையில் நேற்று இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஹரிபாய் பரத்திபாய் சவுத்ரி, ஒரு கேள்விக்கு நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்,”இந்திய சட்டக்கமிஷன் தனது 210-வது அறிக்கையில், தற்கொலை முயற்சிக்கான இந்திய தண்டனைச்சட்டப் பிரிவு 309-ஐ சட்டப்புத்தகத்தில் இருந்து விட்டொழித்து விட பரிந்துரை செய்துள்ளது.சட்டம்-ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் பிரச்சினை என்பதால் சட்டக்கமிஷனின் சிபாரிசு தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கருத்து கேட்கப்பட்டது. இதில் 18 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 309-ஐ சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கி விட ஆதரவு தெரிவித்துள்ளன.மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் அளித்துள்ள ஆதரவினை அடுத்து, இந்த சட்டப்பிரிவை நீக்கிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் உள்ள வளமான மற்றும் வளர்ந்த மாநிலங்களில் தற்கொலை விகிதம் அதிகமாக உள்ளதாகவும், ஏழை மாநிலங்களில் தற்கொலை விகிதம் குறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பு(WHO) தகவலின் படி தற்கொலை விகிதம் அமெரிக்காவை விட இங்கு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

1 லட்சம் மக்கள்தொகையில் 20.9 தற்கொலை உள்ளதாகவும், அமெரிக்காவில் 1 லட்சம் மக்கள்தொகையில் 13.7 உள்ளதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது தென் மாநிலத்தில் அதிகளவு தற்கொலை நடத்துள்ளது. 1 லட்சம் மக்கள்தொகையில் கேரளாவில் 25.63 , தமிழ்நாடு 22.33, ஆந்திரா-தெலுங்கானா 16.89, கர்நாடகா 17.91 தற்கொலைகள் விகிதம் உள்ளது. கோவா பகுதியில் 22.12 உள்ளது.

பீகார் மாநிலத்தில் குறைந்த விகிதம் (0.97) உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் 2.55 தற்கொலை விகிதமும், தலைநகரம் டெல்லியில் 11.79 உள்ளது.கேரளா மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகம் செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தான் நாட்டில் அதிகளவு விவசாயி தற்கொலை விகிதமாக பதிவாகியுள்ளது.

1 லட்சம் மக்கள்தொகையில் 147.28 விவசாயிகள் தற்கொலையில் ஈடுபடுவதாக தெரிகின்றது. ஆந்திர-தெலுங்கான 32.23 , கர்நாடக 28.53, மகாராஷ்டிரா 25.18 ஆக பதிவாகியுள்ளது. மணிப்பூரில் 0.19, பீகாரில் 1.81, உத்திரப்பிரதேசத்தில் 4.06 விவசாயிகள் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். ஆண்டுக்கு 8,00,000 மக்கள் தற்கொலையில் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!