டிரம்பின் மூன்றாவது முறை அதிபர் பதவி ஆசை: அரசியலமைப்பு திருத்தமா, சட்ட ஓட்டையா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மூன்றாவது முறையாக அதிபர் பதவியில் நிற்க விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இதை “நான் நகைச்சுவையாக கூறவில்லை” என்று வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மீறுவதாகத் தோன்றினாலும், டிரம்ப் அதை சுற்றி செல்ல வழிகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் பதவிக்கான தேர்தல் நடக்கும். அரசியலமைப்பின் 22 வது திருத்தப்படி விதிகளின்படி எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது. ஆனால் அண்மையில் இது குறித்து செய்தி சேனலுக்கு டிரம்ப் அளித்த பேட்டியின் போது, ”3வது முறையாக அதிபராக வர வேண்டும். நான் கூறுவது நகைச்சுவை அல்ல. இரண்டு முறை மட்டுமே அதிபராக வர முடியும் என்ற வரம்பைத் தவிர்ப்பதற்கு முறைகள் இருக்கிறது. இது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுப்பேன். நிறைய அமெரிக்கர்கள் தான் மூன்றாவது முறையாகவும் பதவியேற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது கவனம் முழுவதையும், 2வது அதிபர் பதவி காலம் மீது வைத்துள்ளேன்” இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கு சட்டரீதியான திருத்தம் தேவைப்படும், அல்லது வேறு சில சட்ட வழிகளை டிரம்ப் கருத்தில் கொண்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விவரங்கள் தெளிவாக வெளியாகவில்லை என்றாலும், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.