விவாகரத்து என்பது யாதெனில்..?

விவாகரத்து என்பது யாதெனில்..?

ண்கள் வருவார்கள் , போவார்கள். எப்போதும் என் தோழிகள் உடனிருப்பார்கள் எனச் சொல்லி இருப்பவர் ஜெனிஃபர் லோஃபஸ். ஜெனிஃபர் 3 முறை விவாகரத்து ஆனவர். இங்கே பெண்களுக்கு ஆண்கள் அளவுக்கு நட்பு வட்டம் இல்லை. பல பெண்களுக்கு தோழிகளே இல்லை. தோழிகள் இருந்தால் விவாகரத்து அவ்வளவு கடினமாக இருக்காது பெண்களுக்கு.

இது கிடக்கட்டும்….

ஏதோ ஒன்றுக்கு நீங்கள் தேர்வாகவில்லை என்றால் நிறுவனங்கள் ஒரு டெம்ப்ளேட் மெயில் அனுப்பும் இல்லையா ? அது போல செலிபிரிட்டிகள் விவாகரத்து செய்யும் போதும் , இதே போல ஒரு டெம்ப்ளேட் “ப்ரஸ் ரிலீஸ்” செய்கிறார்கள். அதில் ஒரிஜினாலிட்டி , கிரியேட்டிவிட்டி கொஞ்சம் கூட இல்லை. இந்த டெம்ப்ளேட்டை முதலில் உருவாக்கியவர் யாரெனத் தெரியவில்லை. எல்லா செலிபிரிட்டிகளும் அதை காப்பி பேஸ்ட் செய்துகொண்டுள்ளனர்.

முதலிரவு எவ்வளவு பர்ஸனலோ , விவாகரத்தும் அவ்வளவு பர்ஸ்னல் என்பது என் கருத்து. கோர்ட்டில் விவாகரத்து ஆனதும் செய்தியாளர்கள் கூட அதை செய்தியாக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். அதனால் செலிபிரிட்டிகளே வெளியிடும் ப்ரஸ் ரிலீஸும் தேவையில்லை என்றே நினைக்கிறேன். இதைத் தெரிந்து கொண்டு சமூகம் என்ன செய்யப் போகிறது ?

லீகல் பைண்டிங் அல்லாத பிரேக் அப்பை இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்களா என்ன ? தேவைப்பட்டால் , நெருங்கிய ஆட்களுக்கு , தொழில் , பணம் சம்மந்தப்பட்ட ஆட்களுக்குத் தனிப்பட்ட முறையில் சொல்லிக்கொள்ளலாம்.

இப்போது மீண்டும் ஜெனிஃபர் லோபஸுக்கு வருவோம். இங்கே விவாகரத்து ஆனதும் ஆண்கள் இன்னொரு திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு பெண்கள் செய்துகொள்வதில்லை. அதற்கான சூழல் இல்லை என்பதும் உண்மைதான் என்றாலும் அதை பெண்கள் தான் மாற்ற வேண்டும். பொருளாதார ரீதியாக சொந்தக் காலில் நிற்றல் , உடலை அட்ராக்டிவாக வைத்துக்கொள்தல் , சொந்தக்காரர்கள் மற்றும் சமூகத்தின் விமர்சனங்களை மயிராக மதித்தல் போன்ற சில விஷயங்களை ப்ராக்டீஸ் செய்தால் இங்கேயும் பெண்கள் மூன்று நான்கு திருமணங்கள் செய்து கொள்ளலாம் அல்லது இந்த சங்காத்தமே நாணாம் என லிவ் இன்னில் அல்லது ஓப்பன் ரிலேஷன் அல்லது ஏதோ ஒரு உறவில் இருக்கலாம்.

அப்படி ஆகும்போது , டிவேர்ட்ஸ் ஒரு டாபூவாக , சோகமானதாக , வதையாக இருக்காது. டிவேர்ட்ஸ் கொண்டாட்டமானதாகவும் , மகிழ்ச்சியானதாகவும் மாறும். ஒரு புது கார் வாங்கி அப்கிரேட் செய்துகொளவ்து போல குதூகலமானதாக மாறும்.

அராத்து

error: Content is protected !!