ஐந்து மேட்ச் ஜெயித்தும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு டவுட் ஏன்?

ஐந்து மேட்ச் ஜெயித்தும் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு டவுட் ஏன்?

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த உலகக் கோப்பையில் குரூப் சுற்று முடிவடைந்து அடுத்து சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.இதில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் எந்த அணி அரை இறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா மட்டும் வெற்றி பெற்றிருந்தால், இந்நேரம் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதியை உறுதி செய்திருக்கும்.

ஆப்கான் வெற்றி பெற்றதால் வங்கதேசத்திற்கு கூட வாசற்கதவுகளை திறந்து வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்தியா அரையிறுதி முன்னேற வேண்டுமானால்

1) ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டும்

2) ஆஸ்திரேலியாவிடம் 40 ரன்கள் வித்தியாசத்திலோ, 36 பந்துகள் மீதமிருக்கவோ தோல்வியடையக் கூடாது

3) ஆப்கானிஸ்தான் 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வெல்லக்கூடாது.

4) வங்கதேசம் ஆப்கானை வீழ்த்த வேண்டும்

ஆஸ்திரேலியா தகுதி பெற வேண்டுமெனில்

1) இந்தியாவை பெரிய வெற்றி பெற்றால் அவர்களே உறுதி செய்யலாம்

2) இந்தியாவை சிறியதாக வென்று, வங்கதேசம் ஆப்கானை வீழ்த்த வேண்டும்

3) இந்தியாவை சிறிய வெற்றி பெற்றால், அதாவது இந்தியாவை விட நெட் ரன்ரேட் குறைவாக இருக்கும் போது ஆப்கான் – வங்கதேசத்திடம் வென்றாலும் 30 – 40 ரன்களுக்கு அதிகமான வித்தியாசத்தில் வெல்லக்கூடாது

ஆப்கானிஸ்தான் தகுதி பெற

1) இந்தியா ஆஸியையும், வங்கதேசத்தை ஆப்கானிஸ்தானும் வீழ்த்த வேண்டும்

2) இந்தியா ஆஸியை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் , ஆப்கான் சிறிய அளவில் தோற்றாலும் வாய்ப்பு இருக்கும்

3) வங்கதேசத்தை மிகப்பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தினால் கூட அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும்

வங்கதேசம் தகுதி பெற..

1) நடக்காத காரியத்தையெல்லாம் எதுக்கு நேரம் எடுத்து கணக்கு போடனும்.. அதனால் லூசுல விட்டுடுங்கோ..

தற்போதைய நிலையில் இந்தியா 90% அளவுக்கு உறுதியாகத்தான் உள்ளது. உத்தேசமாகத்தான் கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் யாருக்கு அதிஷ்டம் அடிக்கப் போகிறது என பார்ப்போம்!

ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி

error: Content is protected !!