சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்!

சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினம்!

லக அளவில் ஆண்டு தோறும் ஜூலை 2&ம் தேதி சர்வதேச விளையாட்டு பத்திரிக்கையாளர்கள் தினமாக (International Sports Journalists Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த 1924, 2-ம் தேதி இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் பிரஸ் அசோசியேஷன் என்ற அமைப்பு விளையாட்டு பத்திரிக்கையாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.அந்த தினமே இப்படி கொண்டாடப்பட்டு வருகிறது.ஆரம்பிக்கும் போது இந்த அமைப்பில் 29 நாடுகள்தான் உறுப்பினர்களாக இருந்தன. அது இன்றைக்கு 150-க்கு மேலாக அதிகரித்துள்ளது.உலகம் முழுக்க 9,000-கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இதில் இணைந்திருக்கிறார்கள்.

நம் வாழ்க்கையில் கோலி , பாண்டி, சடுகுடு என்று விளையாடத் தொடங்கி இருந்தாலும் சரியாக ஒரு விளையாட்டை பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பை நமக்கு தருவது இந்த விளையாட்டு செய்தியாளர்கள்தான். கிரிக்கெட்டில் உள்ள நேக்குகளை, சூட்சமங்களை சிறிய வாண்டு கூட சொல்கிறது என்றால் அது இந்த செய்தியாளர்களால் என்று தைரியமாக சொல்லலாம்.

செய்தியாளர் என்பவர் வெறும் உள்நாட்டு கலவரங்களையும், அரசியலையும், வணிகத்தை மட்டும் பேச வேண்டும் என்றில்லை. தனக்கு பிடித்த விளையாட்டை தன் செய்திதுறையோடு இணைத்து விளையாட்டு பற்றிய அறிவையும், செய்தியையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இவர்கள் செய்கின்றனர். படிப்பு படிப்பு என்றும் ஓடும் உலகத்தில் விளையாட்டு என்பதையே இங்கு பலர் மறந்து விடுகின்றனர். அதில் இருந்தாலும் அது பற்றி தெரிந்து கொள்ளவோ விளையாடவோ நேரம் ஒதுக்காமல் ஓடும் உலகத்திற்கு காட்சி வழியாகவோ, குறும் செய்தியாகவோ, வானொலி அலையின் மூலமோ குறைந்த நேரத்தில் அவர்கள் விரும்பும் விளையாட்டு அப்டேட்களை தருபவர்கள் நமக்கு ஸ்பெஷல் தானே?

மெஸ்ஸி, ரொனால்டோ, தோனி,கோலி, என்று மக்கள் உலகளாவிய விளையாட்டுகளில் அறிமுகமாகியுள்ளார். இந்த ஆர்வம் தோன்றுவதற்குக் காரணம் அவர்களது முழு விளையாட்டை பார்க்காவிடினும், அவர்களின் சிறப்புகளை நமக்கு இந்த பத்திரிகையாளர்களின் எழுத்துக்களோ சொற்களோ நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. சும்மா தெருவில் காகித பந்தை பரிட்சை அட்டையில் அடித்து விளையாடுபவன் கூட செய்தித்தாளில் வரும் தோனி ஸ்கோர் கார்டையும் போட்டோவையும் வெட்டி வைக்கிறான். அதை எல்லாம் கவனத்தில் கொண்டு 1800களில் விளையாட்டு பத்திரிகையாளர்கள் என்றொரு பணி உருவானது, ஆரம்பத்தில் இது மேல் தட்டு விளையாட்டுகளையும், அது போன்ற விளையாட்டு நிகழ்வுகளின் சமூகப் பின்னணியை விவரிப்பதில்தான் அதிக அக்கறை கொண்டிருந்தது. ஆனா; 1920களில் செய்தித்தாள்கள் விளையாட்டு இதழியலுக்கு அதிக நேரத்தையும், இடத்தையும் கொடுக்க தொடங்கியதால் இந்த பார்ட் டைம் ஜாப் முழுநேர தொழில் வடிவம் பெற வழிவகுத்தது.

ஆக சாதி, மதம், இனம், நாடு, மொழி எல்லாவற்றையம் கடந்து மக்களை விளையாட்டால் ஒன்று சேர்க்கும் பணியைச் செய்யும் விளையாட்டு பத்திரிகையாளர்களை கவுரவிக்கும் நாள் இன்று.

வாத்தீ அகஸ்தீஸ்வரன்

Related Posts

error: Content is protected !!